ஏப்ரல் 14 அறந்தாங்கியில் டாக்டர் அம்பேத்கர் சிலை நிறுவப்படும். அனைத்து கட்சி குழு தீர்மானம்




புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகரில் சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் சிலை அமைப்பு அனைத்து கட்சி குழு கூட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கவிவர்மன் தலைமையில் சிலை அமைப்பு குழு தலைவர் கே.எம்.எஸ் எனப்படும் ஆசிரியர் சுப்பையா முன்னிலையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பேசிய ஆசிரியர் சுப்பையா அறந்தாங்கியில் சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் சிலையை நிறுவ 2006ஆம் ஆண்டு முதல் இருந்து வரும் 13 ஆட்சித்தலைவர்களிடம் 60 முறை மனுக்கள் கொடுத்தும் 16 ஆண்களாக இதுகுறித்த கோரிக்கையை செவிசாய்கவில்லை.நகராட்சி தீர்மானம் போட்டு வாங்கியுள்ளோம்,காவல்துறை மற்றும்  தேசிய நெடுஞ்சாலை துறை தடையில்லா சான்றிதழ் பெற்றுள்ளோம்.

 சிலை அமைக்கும் இடம், பீடம், வெங்கலம் உருவம் என சிலை அமைக்க அரசு காட்டிய அனைத்து நெறி முறைகளையும் 2013ம் வருடத்திற்கு முன்பே அனைத்து விதிமுறைகளையும் நிறைவேற்றிவிட்டோம். ஆனாலும் மாவட்ட ஆட்சித்தலைவர்கள் அனுமதி தரவில்லை. எனவே ஏப்ரல் 14 அன்று அனைத்து கட்சி மாநில தலைவர்கள் முன்னிலையில் டாக்டர் அம்பேத்கர் சிலை நிறுவ வேண்டும் என கூறினார்.

இக்கூட்டத்தின் நோக்கம் மற்றும் தீர்மானத்தை விளக்கி விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் வழக்கறிஞர் கலைமுரசு,கண்ணன்,நாகமுத்து,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ராஜேந்திரன்,மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர்  முனைவர் முபாரக் அலி,முஸ்லிம் லீக் ஜாகிர் உசேன்,மனிதநேய மக்கள் கட்சி செயற்குழு உறுப்பினர் கிரீன் முகம்மது,திசைகள் அமைப்பு பொருளாளர் முபாரக் ,திராவிட முன்னேற்றக் கழகம் செல்வம்,இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் பாண்டி,இந்திய ஜனநாயக மாதர் சங்கம் இந்திராணி,அனைத்து இந்திய இளைஞர் பெருமன்றம் ராஜேந்திரன்,தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாவட்ட தலைவர் வழக்கறிஞர் வரதராஜன்,மக்கள் அதிகாரம் மதிமுருகன்,அம்பேத்கர் மக்கள் இயக்கம் ஆசிரியர் மெய்யர்,அம்பேத்கர் அறக்கட்டளை ராஜேஸ்குமார்,பகுஜன் சமாஜ் கட்சி சின்னத்துரை,திராவிட கழகம் நிர்வாகிகள்,தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் ஜபருல்லா, வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் லோலகநாதன்,அலாவுதீன்,  மார்க்சிஸ்ட் லெனிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி மதிமுருகன்,எஸ்ஸி,எஸ்டி கூட்டமைப்பு சந்திரமோகன், ரியாஸ் அகமது,கவிபாலா மற்றும் ஏப்ரல் 14 சிலை அமைப்பு குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.






எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments