ஆன்லைனில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பது எப்படி முழு விவரம்




தமிழகத்தில் இலவச மின்சாரம் மானிய மின்சாரம் பெறும் நுகர்வோர்கள் தங்களின் ஆதார் எண்ணை மின் நுகர்வோர் எண்ணுடன் இணைக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து தமிழக அரசு அரசிதழ் வெளியிட்டுள்ளது. 

மானியம் பெறும் அனைத்து மின் நுகர்வோர்களும் தங்களது ஆதார் எண்ணுடன் மின் நுகர்வோர் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது

இலவச மின்சாரத்தில் முறைகேட்டை தடுக்க ஆதார் எண் மின் இணைப்பு எண்ணுடன் இணைக்க முடிவு செய்யப்பட்டது. மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு தமிழக அரசு தற்போது ஒப்புதல் அறிவித்துள்ளது
 
மின் நுகர்வோருக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. சலுகைகளை பெற விரும்பும் தகுதியான நபர் ஆதார் எண்ணை அளிக்க வேண்டும் என அரசிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மின் முறைகேட்டை தடுக்க ஆதார் எண் இணைக்கும் பணி துவங்கியுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். மேலும் ஆதார் எண் இணைப்பதன் மூலம் மானிய மின்சாரம் முறைகேடாக செல்வதை தடுக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார் எண்ணை இணைக்குமாறு மின்நுகர்வோரின் பதிவு செய்துள்ள செல்போன் எண்களுக்கு மின்வாரியம் குறுஞ்செய்தி மூலம் தகவல் அனுப்பி வருகிறது.

ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் வைத்திருக்கும் நுகர்வோர் , ஆதார் எண் இணைப்பது எப்படி

மேலும் ஒருசில மின்நுகர்வோர் 4 அல்லது 5 வீடுகள் வைத்திருப்பார்கள், மேலும் ஒரே வீட்டிற்க்கு கீழ் தளம்  மாடி என ஒன்றுக்கும் மேற்பட்ட மின்இணைப்பை பெற்றிருப்பார்கள் அதாவது  ஒரே பெயரில் நான்கைந்து வாடகை வீடுகளுக்கு மின்இணைப்பை வைத்திருக்கின்றனர். அவர்கள் மின் இணைபுகளுடன் ஆதாரை எப்படி இணைப்பது என்பது குறித்து பொதுமக்களிடையே குழப்பம் இருந்து வந்தது. 

இந்நிலையில், மின்நுகர்வோர் தங்கள் பெயரில் உள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட மின்இணைப்புகளுக்கு ஒரே ஆதார் எண்ணை இணைக்கலாம் 

அதேபோல் வீடுகளை வாடகைக்கு விட்டிருக்கும் பட்சத்தில், அந்த வீட்டில் குடியிருக்கும் வாடகைதாரர்கள் தங்கள் ஆதார் எண்ணை அந்த வீட்டு மின்இணைப்புடன் இணைக்கலாம். இதற்கான வசதிகளும் மின்வாரிய இணையதளத்தில் செய்யப்பட்டுள்ளன.

முதல் 100 யூனிட் மின்சாரத்தை இலவசமாக பெரும் 

வீட்டு நுகர்வோர், 

குடிசை நுகர்வோர், 

பொது வழிபாட்டுத்தலங்கள், 

விவசாய பயன்பாடு மின் இணைப்புகள், 

விசைத்தறி, 

கைத்தறி நுகர்வோர்கள் 

என மானியம் பெரும் நுகர்வோர்கள் மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

யாரெல்லாம் ஆதார் எண் இணைக்கத் தேவையில்லை

தொழிற்சாலைகள், 

கடைகள், 

நிறுவனங்கள் 

போன்ற மானியம் பெறாத நுகர்வோர்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது இந்நிலையில் ஆன்லைனில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்க வசதி அளிக்கப்பட்டுள்ளதுரியத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஆன்லைனில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைப்பது எப்படி:-
முதலில் மின்வாரிய அதிகாரபூர்வ இணையதளம் செல்லுங்கள்  https://www.tangedco.gov.in/

அடுத்து அதில் உள்ள CONSUMER INFO என்பதை கிளிக் செய்யுங்கள்

அடுத்து அதில் உள்ள TANGEDCO  link your service connection with aadhar 

அல்லது https://nsc.tnebltd.gov.in/adharupload/ இந்தலின்ங்கை கிளிக் செய்யுங்கள்

அடுத்து அதில் உங்கள் மின் இணைப்பு எண்ணை முழுமையாக பதிவிட்டு என்ட்டர் கொடுக்கவும்

அடுத்து அதில் உங்கள் மின் இணைப்பு எண்ணுக்கு கீழ் உங்கள் மொபைல் எண்ணின் கடைசி நான்கு இலக்கம் காண்பிக்கப்படும் 

அந்த எண் சரி என்றால் யெஸ் என்பதை கிளிக் செய்யுங்கள் இல்லை என்றால் நோ என்பதை கிளிக் செய்து தற்போது உங்களிடம் உள்ள மொபைல் எண்ணை பதிவிட்டு என்ட்டர் கொடுங்கள்

அடுத்து உங்கள் போனுக்கு வரும் ஓடிபியை பதிவிடுங்கள்

அதன் பின்பு வரும் பக்கத்தில் உங்கள் பெயர் , ஆதார் எண் மற்றும் உங்கள் ஆதாரை ஸ்கேன் செய்து அப்லோடு செய்யுங்கள்

அவ்வளவுதான் உங்கள் மின் இணைப்புடன் உங்கள் ஆதார் எண் இணைப்பு பூர்த்தி ஆகி விட்டது

நீங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்பு வைத்திருந்தால் இதே வழிமுறையை பயன்படுத்தி உங்கள் அனைத்து மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இனைக்கலாம்

மேலும் மின் நுகர்வோர்கள் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் போது ஒரு நுகர்வோர் 3 முதல் 5 வீடுகள் வைத்திருந்தால் கூட 100 யூனிட் மானிய மின்சாரம் தொடரும் ஆதார் எண்ணை இணைப்பதால் 100 யூனிட் மானிய மின்சாரம் ரத்து செய்யப்படும் என்று வரும் தகவல் வதந்தி என்று மின் வாரிய அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் தெரிவித்துள்ளார்.



எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments