ஆவுடையார்கோவிலில் 250 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா!ஆவுடையார்கோவிலில் 250 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலில் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் சமூக நலன் மற்றும் உரிமைத்துறை, குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் 250 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு ஒன்றியக்குழு தலைவர் உமாதேவி தலைமை தாங்கினார். சமூகநல அலுவலர் வசந்தி அனைவரையும் வரவேற்று பேசினார். விழாவில் ஊராட்சி மன்ற தலைவர்கள், ஆவுடையார்கோவில் வட்டார மருத்துவ அலுவலர், பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு வளைகாப்பு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். 

வளைகாப்பு விழாவில் 250 கர்ப்பிணிகளுக்கு வளையல் அணிவிக்கப்பட்டு சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன. கர்ப்பிணிகளுக்கு 5 வகையான கலவை சாதம் வழங்கப்பட்டன. ஊட்டச்சத்து கண்காட்சியில் கர்ப்பிணிகள் எடுத்துக்கொள்ள வேண்டிய ஊட்டச்சத்து மிக்க உணவுப்பொருள் காட்சிப்படுத்தப்பட்டது. 

இதற்கான ஏற்பாடுகளை குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் மேற்பார்வையாளர் நிலை - 1, மேற்பார்வையாளர் நிலை - 2 மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் செய்திருந்தனர். முடிவில் மேற்பார்வையாளர் நிலை- 1 பெரியநாயகம் நன்றி கூறினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments