விளையாட்டு விடுதிகளில் சேர்வதற்கு மாணவ/மாணவியர்கள் இணையதள முகவரியில் 25.11.2022-க்குள் விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தகவல்!!



விளையாட்டு விடுதிகளில் சேர்வதற்கு மாணவ/மாணவியர்கள் இணையதள முகவரியில் 25.11.2022-க்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

மாவட்ட, மாநில, தேசிய அளவில் பதக்கங்கள் பெற்ற பள்ளி மாணவ/மாணவியர் மற்றும் உலக உடற்திறனாய்வு தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ/மாணவியர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு விடுதிகளில் சேர்வதற்கான சிறப்பு சேர்க்கை நடைபெற உள்ளது. 

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு விளையாட்டுத் துறையில் சாதனைகள் படைப்பதற்கு ஏற்ப நல்ல பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய விளையாட்டு விடுதிகள் மற்றும் விளையாட்டுப் பள்ளிகள் மாணவர்களுக்கான விளையாட்டு விடுதி, அரியலூர், சென்னை, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, மதுரை, நீலகிரி, இராமநாதபுரம், தஞ்சாவூர், தூத்துக்குடி, திருச்சி, திருநெல்வேலி, விழுப்புரம் ஆகிய இடங்களிலும் மற்றும் மாணவிகளுக்கான விளையாட்டு விடுதி, சென்னை, திண்டுக்கல், தருமபுரி, ஈரோடு, பெரம்பலூர், புதுக்கோட்டை மற்றும் திருவண்ணாமலை ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன.

இவ்விடுதிகளில 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு முடிய மாணவ/மாணவிகள் - உலக திறனாய்வு WBTSS - அடிப்படையில் மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட 2021-2022 மற்றும் 2022-2023 (தேர்வு நாள் வரை) கல்வியாண்டுகளில் அரசு அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு அமைப்புகள் நடத்திய போட்டிகளில் மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் பதக்கம் வென்ற மாணவ/மாணவிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 

9-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கான 2020-2021 மற்றும் 2021-2022 மற்றும் 2022-2023 (தேர்வு நாள் வரை) ஆகிய கல்வியாண்டுகளில் அரசு அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு அமைப்புகள் நடத்திய போட்டிகளில் மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் பதக்கம் வென்ற மாணவ/மாணவியருக்கு நேரடி சேர்க்கை மேற்கொள்ளப்படும்.

2022 - 2023 -ம் ஆண்டிற்கு விளையாட்டு விடுதியில் சேர்வதற்கு இரண்டாம் கட்ட சேர்க்கைக்கு மாணவர்கள் கைப்பந்து, வளைகோல்பந்து, கிரிக்கெட், வாள்சண்டை, தடகளம், கூடைப்பந்து, ஜிம்னாஸ்டிக், கையுந்துபந்து, கால்பந்து, ஸ்குவாஷ் மற்றும் கபாடி உள்ளிட்ட பிரிவுகளிலும், மாணவிகள் குத்துச்சண்டை, வாள்சண்டை, கூடைப்பந்து, கையுந்துபந்து, கபாடி, தடகளம், கால்பந்து, கைப்பந்து, வளைகோல்பந்து மற்றும் டென்னிஸ் உள்ளிட்ட பிரிவுகளிலும் www.sdat.tn.gov.in என்ற இணைய தள முகவரியில் 25.11.2022-க்குள் விண்ணப்பிக்கலாம்.

மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் உடற்திறனாய்வு தேர்வில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விளையாட்டில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வம் கொண்டுள்ள மாணவ/மாணவியர்கள் www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விளையாட்டு விடுதியில் சேர்வதற்கான படிவத்தினை பூர்த்தி செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

படிவத்தினை பூர்த்தி செய்வதற்கான கடைசி நாள் 25.11.2022 ஆகும். தேவைப்படும் நேர்வுகளில் மட்டும் தேர்வுகள் 26.11.2022 அன்று தொடங்கி 29.11.2022 முடிய நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கவிதா ராமு, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments