கோபாலப்பட்டிணத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன குரல்!நாட்டானிபுரசக்குடி ஊராட்சி கோபாலப்பட்டிணம் அவுலியா நகரின் அவல நிலை, குப்பை மேடாய் மாறிவரும் கிராமம் மற்றும் ECR ரோட்டில் இருந்து கோபாலப்பட்டிணம் காட்டுகுளம் பழைய தார் சாலையை புதுபித்து தரக்கோரி நடவடிக்கை எடுக்க வேண்டி மாவட்ட நிர்வாகத்தை நோக்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டன குரல் எழுப்பி உள்ளது.

கண்டன குரல்

*மாவட்ட நிர்வாகமே நாட்டானி புரசக்குடி பஞ்சாயத்து அடிப்படை வசதிகள் செய்து தருவதில் நான் பெரியவனா, நீ பெரியவனா என்ற குளறுபடியை ஆட்சியர் அவர்கள் தலையிட்டு சம்மந்தபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும்,

*கோபாலப்பட்டிணம் அவுலியா நகர் 4,5,6 சாலைக்கு சிமெண்ட் சாலை அமைத்து தர கோரி.

*ECR ரோட்டில் இருந்து காட்டுகுளம் சாலையை சீர்செய்யுமாறு.

*கோபாலப்பட்டிணம் குப்பை கழிவுகளை கொட்ட இடமும், அதனை எப்போதும் போல் எடுக்க நடவடிக்கை எடுக்கவும் வேண்டிகிறோம்.

கோபாலப்பட்டிணம் அவுலியா நகர் சாலை வசதியின்றி காணப்படும் வீதி 

கோபாலப்பட்டிணம் அவுலியா நகர் சாலை வசதியின்றி காணப்படும் வீதி 

இப்படிக்கு,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,
கோபாலப்பட்டிணம், மீமிசல் கிளைகள், 
நாட்டானிபுரசக்குடி பஞ்சாயத்து 
புதுக்கோட்டை மாவட்டம்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments