ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளி சார்பில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம்!ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளி சார்பில் நான்கு நாட்களாக நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட திட்ட சிறப்பு முகாம் கடந்த வெள்ளிக்கிழமை (04-11-2022) அன்று பள்ளி தலைமையாசிரியர் தாமரைச்செல்வன் அவர்களால் துவங்கப்பட்டது. கடந்த மூன்று தினங்களாக பள்ளி வளாகத்தில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களால் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.நான்காம் நாளான (07-11-2022) இன்று வடகலூர் ஆதிகைலாச நாதர் கோயில் உள் பிரகார பூங்காவனத்தில் புல் பூண்டு செடிகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிகழ்வானது நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் குமார், உதவி திட்ட அலுவலர் மதியழகன், உடற்கல்வி ஆசிரியர் பாக்கியராஜ், பதிவறை எழுத்தர் பாலசுப்பிரமணியம்ஆகியோர் முன்னிலையில்  சிறப்புடன் நடைபெற்று வருகிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments