ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட பேரிடர் மேலாண்மை முகமை சார்பில் விழிப்புணர்வு வாசகங்களுடன் துணிப் பைகள் வழங்கல்!



ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவா்களுக்கு மாவட்ட பேரிடர் மேலாண்மை முகமை சார்பில் விழிப்புணர்வு துணிப் பைகள் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தமிழ்நாடு பேரிடர் அபாயக்குறைப்பு முகமை மற்றும் புதுக்கோட்டை மாவட்ட பேரிடர் மேலாண்மை முகமை சார்பில் புயல் அல்லது சூறாவளி, மற்றும் வெள்ளம் ஏற்பட்டால் எவ்வாறு பாதுகாத்து கொள்வது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாசகங்கள், மாநில/மாவட்ட அவசர கட்டுப்பாட்டு எண், மற்றும் கைபேசி செயலி உள்ளிட்ட விவரங்கள் துணிப்பையில் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டது. 
புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு 100 துணிப்பைகள்  வழங்கப்பட்டன. இதனை பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், இளம் செஞ்சிலுவை சங்க மாணவர்கள் மற்றும் சாரணர் இயக்க மாணவர்களுக்கு பள்ளித் தலைமையாசிரியர் தாமரைச்செல்வன் வழங்கினார். துணிப்பையின் அவசியத்தையும், பேரிடர் சார்பான விழிப்புணர்வையும் நாட்டு நலப்பணித்திட்ட திட்ட அலுவலர் குமார் எடுத்துரைத்தார். 
இந்நிகழ்வில் உதவி தலைமை ஆசிரியர் ஸ்டாலின், ஆசிரியர்கள் செல்வஷாஜி, திருவருட் செல்வன், காசிநாதன், ஆய்வக உதவியாளர் ராஜேந்திரன், பதிவறை எழுத்தர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட அனைவரும்  கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments