SDPI கட்சியின் புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட பொதுக்குழு!



SDPI கட்சியின் புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட பொதுக்குழு 28.11.2022 நடைபெற்றது.

பொதுக்குழுவிற்கு மாவட்டத் தலைவர் U.செய்யது அகமது தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் சாலிஹ் வரவேற்புரையாற்ற,மாவட்ட பொதுச் செயலாளர் SAM.அரஃபாத் ஆண்டறிக்கையை வழங்கினார்.

சிறப்பு அழைப்பாளராக மாநிலச் செயலாளர் A.அபூபக்கர் சித்திக் கலந்து கொண்டார். மண்டல தலைவர் தப்ரே ஆலம் பாதுஷா முன்னிலை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் விம் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர், தொகுதி தலைவர் மற்றும் நிர்வாகிகள், நகரத் தலைவர் மற்றும் நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

இக்குழுவில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.

தீர்மானம் 1:
மாவட்ட ஊரக வளர்ச்சித் துறைக்கு புதுக்கோட்டை மாவட்ட கிராம பஞ்சாயத்து சார்பில் நடக்கக்கூடிய கிராம சபா கூட்டங்களில் மக்களின் அடிப்படைத் தேவைகள் சம்பந்தமாக எடுக்கக்கூடிய தீர்மானங்களை நிறைவேற்றாமல் அலட்சியப் போக்கில் செயல்படும் ஊரக வளர்ச்சித்துறை கவனம் செலுத்தி மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என்று இப்போது குழுவின் வாயிலாக தெரிவித்துக் கொள்கின்றோம். 

தீர்மானம் 2:
மணமேல்குடி அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர் மற்றும் செவிலியர்கள் இல்லாத காரணத்தால் அவசரக் காலத்தில் போதிய மருத்துவம் கிடைக்காததால் இறப்புகளும் மன அழுத்தத்திற்கும் சிரமங்களுக்கும்  மக்கள் உள்ளாகின்றார்கள் எனவே மருத்துவத்துறை கவனம் செலுத்தி மணமேல்குடி மருத்துவமனையை தரம் உயர்த்தி மக்கள் மக்கள் பயன்படும் வகையில் செயல்படுத்திட இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கின்றது.

தகவல்: முஹம்மது ஹனிபா,
SDPI கட்சி,
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments