புதுக்கோட்டை மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் மீண்டும் சாலையை ஆக்கிரமித்த மாடுகள்! வாகன ஓட்டிகள் அவதி!! நிரந்தரமாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை!!!புதுக்கோட்டை மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலை பகுதி சாலைகளில் மீண்டும் சுற்றித் திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே நிரந்தரமாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை‌ விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் பகல் மற்றும் இரவு நேரங்களில் அதிக அளவில் மாடுகள் சாலைகளில் நிற்பதால் வாகனங்கள் சென்று வருவதற்கு மிகுந்த சிரமம் ஏற்படுகின்றது. 

இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் வரும்பொழுது விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் கனரக வாகனங்கள் செல்லும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது.

புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடி, மணமேல்குடி,அம்மாபட்டினம், கோட்டைப்பட்டிணம், மீமிசல் சாலையில் இரவு நேரங்களில் மாடுகள் அதிக அளவில் நின்று சாலைகளை ஆக்கிரமித்து கொள்கின்றது. இதனால் வாகன ஓட்டிகளும், வயதானவர்கள், குழந்தைகள் சென்று வர மிகுந்த சிரமம் அடைகின்றனர். 

உடனடியாக பகல் மற்றும் இரவு நேரங்களில் விபத்தை ஏற்படுத்தும் மாடுகளை பிடித்து அப்புறப்படுத்த அந்த அந்த ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments