தனுஷ்கோடி அரிச்சல்முனையில் மணல் பரப்பை மீண்டும் கடல் விழுங்கியது



 


தனுஷ்கோடி அரிச்சல்முனையில் மணல் பரப்பை மீண்டும் கடல் விழுங்கியது. எனவே சாலைவளைவில் நின்றுதான் இனி சுற்றுலா பயணிகள் ரசிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

தனுஷ்கோடி ராமேசுவரத்தில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் தனுஷ்கோடி அரிச்சல்முனை உள்ளது. தனுஷ்கோடி கடலானது இயற்கையாகவே கடல் நீரோட்டம் மற்றும் கடல் சீற்றம் உள்ள பகுதியாகும். எனவே அரிச்சல்முனை கடற்கரை சாலை வளைவை சுற்றியுள்ள நிலப்பகுதியில் அவ்வப்போது கடலின் தன்மைக்கு ஏற்ப மாற்றங்கள் நிகழ்வது உண்டு. அரிச்சல்முனை சாலை திறக்கப்பட்ட போது சாலை வளைவை சுற்றி இருபுறமும் சில கிலோமீட்டர் தூரத்திற்கு கடல் நீரே இல்லாமல் வெறும் மணல் பரப்பாக காட்சி அளித்தது.

 ஆனால் அடுத்த சில ஆண்டுகளில் மணல் பரப்பாக இருந்த பகுதி முழுவதும் கடல் நீரால் சூழப்பட்டது. மணல் பரப்பாக காட்சியளித்தது இந்தநிலையில் அரிச்சல்முனை தெற்கு பகுதியில் கடல் நீர் முழுவதுமாக உள்வாங்கி சில மாதங்களாக மணல் பரப்பாகவே காட்சி அளித்து வந்தது. இந்த நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள கடல் சீற்றம் மற்றும் காலநிலை மாற்றம் காரணமாக அரிச்சல்முனை சாலை வளைவை சுற்றி உள்ள மணல் பரப்பு முழுவதையும் மீண்டும் கடல் விழுங்கியதால், கடலாக மாறி காட்சியளித்து வருகிறது. இதனால் மணல் பரப்பில் இறங்கி நடந்து கடல் அழகை காண முடியாத நிலை சு்ற்றுலா பயணிகளுக்கு மீண்டும் ஏற்பட்டு இருக்கிறது.

 சாலையோரம் கடல் அரிப்பை தடுப்பதற்காக போடப்பட்டுள்ள கற்களில் நின்றும், சாலை வளைவில் நின்றும் பார்த்து ரசிக்கின்றனர். மீண்டும் காலநிலை மாற்றம் ஏற்பட்டு, கடல் சீற்றம் குறையும் போதுதான் இனி மணல் பரப்பு உருவாகும் என மீனவர்கள் தெரிவிக்கிறார்கள்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments