கோபாலப்பட்டிணத்தில் GPM மக்கள் மேடை நடத்திய இலவச மருத்துவ பரிசோதனை முகாம்!கோபாலப்பட்டிணத்தில் GPM மக்கள் மேடை சார்பில் இலவச கண், பல் மற்றும் பொது மருத்துவ பரிசோதனை முகாம் நேற்று நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் GPM மக்கள் மேடையால் 20.11.2022 ஞாயிற்றுக்கிழமை சின்னப்பள்ளிவாசல் தர்கா அருகே உள்ள பாப்புலர் மழலையர் பள்ளியில் கோபாலப்பட்டிணம் ஜமாத் தலைவர் மற்றும் நிர்வாகிகள் தலைமையிலும், கோபாலப்பட்டிணம் மக்கள் மேடை தலைவர், ஆலோசனை குழு உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர்கள் முன்னிலையில் மருத்துவ முகாம் நடைபெற்றது. மேலும் இதில் கலந்து கொண்ட மருத்துவர்களுக்கு ஊர் ஜமாத்தார்கள் மற்றும் மக்கள் மேடை அறங்காவலர் ஆகியோர் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.

இந்த பரிசோதனை முகாமில் கண் மருத்துவர் H.உமர் முக்தார் DO, Dr.அஷ்கர் ஷெரிப் DO, பல் மருத்துவர் S.அபூபக்கர் சித்திக் BDS, மற்றும் குழந்தைகள் மற்றும் பொது மருத்துவர் KNNL .N.சேக் அப்துல்லா M.B.B.S., FIP., ஆகிய மருத்துவர்கள் கலந்து கொண்டு கண், பல் மற்றும் பொது மருத்துவம் சம்மந்தமான அனைத்து நோய்களுக்கும் இலவசமாக மருத்துவ ஆலோசனைகள் வழங்கினார்கள்.

இம்முகாமில் கண் மருத்துவம் 89, பொது மருத்துவம் 80,பல் மருத்துவம் 51 ஆக மொத்தம் 220 பயனாளிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments