மணமேல்குடி ஒன்றியத்தில் குழந்தைகள் தின விழா கொண்டாட்டங்கள்!மணமேல்குடி ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து பள்ளிகளிலும் குழந்தைகள் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர் செழியன் பிரதாபிராமன்பட்டினம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் கலந்து கொண்டார் .

மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர் இந்திராணி ராம் நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் கலந்துகொண்டு மாணவர்களை உற்சாகப்படுத்தினார்.

அதேபோல் மணமேல்குடி வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) சிவயோகம் வடக்கூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் குழந்தைகள் தின விழாவில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்பித்தார்.

மேலும் ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பாசிரியர்கள் அனைவரும் இன்று குழந்தைகள் தின விழாவில் கலந்து கொண்டு டிசம்பர் 3-ஆம் தேதி உலக மாற்றுத்திறனாளி குழந்தைகள் தினத்தை கொண்டாடும் விதமாக சிறப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments