R.புதுப்பட்டிணத்தில் ஊராட்சி தினத்தையொட்டி நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி கிராம சபை கூட்டம்!



R.புதுப்பட்டிணத்தில் ஊராட்சி தினத்தையொட்டி நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி கிராம சபை கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஒன்றியம், நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியில் உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு 01.11.2022 செய்வ்வாய்க்கிழமை R.புதுப்பட்டிணம் கிராமம் முஸ்லீம் தெரு தர்கா வளாகத்தில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மன்ற தலைவர் சீத்தாலெட்சுமி தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற துணை தலைவர் அபுதாஹிர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்தல், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துதல், ஊராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த ஊழியர்களை சிறப்பித்தல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் பற்றி விவாதித்தல், ஊரகப் பகுதிகளில் மழை நீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த விவாதித்தல், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் மற்றும் கொரோனா சம்பந்தமாக விவாதித்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கலைஞர் வீடு திட்டம் சம்பந்தமாக பல்வேறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. 
இக்கூட்டத்தில் தூய்மை  பணியாளர் மற்றும் கொரோனா காலக்கட்டத்தில் ஊராட்சி மன்ற சார்பாக தூய்மை பணி செய்தவர்களுக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பாக புதுகை கிழக்கு மாவட்ட துனைச் செயலாளர் S. அஜ்மல் கான் உன்னத ஊழியர் விருது வழங்கி கௌரவப்படுத்தினார்.
இதில் சுகாதாரத்துறை அலுவலர்கள், அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர், அங்கன்வாடி பணியாளர்கள், மின்சாரத்துறை, கால்நடை துறை மற்றும் காவல்துறையினர் உள்பட துறைசார்ந்த அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

முடிவில் ஊராட்சி செயலர் சுமதி நன்றி கூறினார்.

இந்த கிராமசபை குறித்து துண்டு பிரசுரங்களோ, வானங்களில் மைக் வைத்து அறிவிப்பு செய்யாததால் சரியான முறையில் மக்கள் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.





எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments