மணமேல்குடி ஒன்றியத்தில் பள்ளிச் செல்லாச் குழந்தைகளை கண்டறிந்து பள்ளியில் சேர்ப்பு!



மணமேல்குடி ஒன்றியத்தில் பள்ளிச் செல்லாச் குழந்தைகளை கண்டறிந்து பள்ளியில் சேர்க்கப்பட்டது.

மணமேல்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட பொன்னகரம் கிராமத்தை சேர்ந்த 8-ஆம் வகுப்பு மாணவி மரிய அபர்ணா மற்றும் திருமலைகாந்த் 12-ஆம் வகுப்பு மாணவன் ஆகியோரை பள்ளியில் தொடர்ந்து படிப்பதற்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டு இன்று 22.11.2022 மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேரில் அழைத்து சென்று தலைமை ஆசிரியர் உதவியுடன் வகுப்பில் மாணவரை மீண்டும் சேர்க்கப்பட்டது.
இதேபோல் பொன்னகரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் மரிய அபர்ணா எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவியை தொடர்ந்து பள்ளி வருவதற்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டு பள்ளியில் சேர்க்கப்பட்டது.

மாணவன் திருமலைகாந்த் தொடர்ந்து பள்ளிக்கு செல்வேன் என்று உறுதி அளித்தார்.
இக்களப்பணியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மணமேல்குடி தலைமை ஆசிரியர் ஜீவானந்தம், பொன்னகரம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் இளங்கோவன், ஆசிரியர்கள் பழனி கே.பி.சிங், வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) சிவயோகம் மற்றும் பள்ளிச் செல்லாக் கண்டறிந்து குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கு மிகவும் உறுதுணையாக இருந்த மணமேல்குடி வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர் அங்கையற்கண்ணி ஆகியோர் ஈடுபட்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments