மணமேல்குடி ஒன்றியத்தில் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களுக்கு குறைதீர் கற்பித்தல் பயிற்சி!மணமேல்குடி ஒன்றியத்தில் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களுக்கு குறைதீர் கற்பித்தல் ஒரு நாள் பயிற்சி நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் வழிகாட்டுதலின்படி மணமேல்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கோட்டைப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி, அம்பலவாணநேந்தல் அரசு மேல்நிலைப்பள்ளி, பெருமருதூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய நான்கு இடங்களில் 
இப்பயிற்சி நடைபெற்றது.

இப்ப பயிற்சியினை மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர் செழியன் மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி வைத்தார்.

மணமேல்குடி வட்டார கல்வி இந்திராணி மணமேல்குடி வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு சிவயோகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இப்பயிற்சியில் தன்னார்வர்களுக்கு முன்னறித் தேர்வு 1 முதல் 10 வரை அனைத்து வினாக்களும் கொடுத்து மதிப்பீடு செய்தல், ஒவ்வொரு மாணவரும் திறன்களுக்கு நிலை ஏற்ப அனைத்து அடிப்படை திறன்களையும் மேம்படுத்துவது தொடர்பாக பயிற்சி வழங்கப்பட்டது.

அதேபோல் அடிப்படை திறன்களை மாணவர்கள் பெற்றுள்ளனரா என்பதை மதிப்பீட்டின் மூலம் உறுதி செய்து அடைவு திறன் அட்டவணையில் குறிப்பிடப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

பயிற்சியில் கருத்தாளர்களாக ஆசிரியர் பயிற்றுநர்கள் முத்துராமன் வேல்சாமி மற்றும் அங்கையற்கன்னி ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் கண்ணன் தலைமை ஆசிரியர்கள் தேவராஜ் செல்வகுமார் ஆசிரியர்கள் தாமஸ் கிங் ஜான் பால் முனியசாமி செபஸ்தியான் மற்றும் ஆகியோர் செய்யப்பட்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments