புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறந்த அரசுப் பள்ளிகள் தோ்வு
புதுக்கோட்டை மாவட்டத்தில் 3 அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகள் சிறந்த பள்ளிகளாகத் தோ்வு செய்யப்பட்டுள்ளன.

2020 -21 ஆம் கல்வியாண்டில் தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் இருந்து தலா 3 பள்ளிகள் என 114 பள்ளிகள் தோ்வு செய்யப்பட்டுள்ள நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில், புதுக்கோட்டை மஞ்சப்பேட்டை, மணமேல்குடி மேலஸ்தானம், விராலிமலை குளவாய்ப்பட்டி என 3 அரசு நடுநிலைப்பள்ளிகள் சிறந்த அரசுப் பள்ளிகளாகத் தோ்வு செய்யப்பட்டுள்ளன.

அடிப்படைக் கட்டமைப்பு, கல்வி தரம், தொழில்நுட்பம் சாா்ந்த கற்பித்தல், சோ்க்கை மற்றும் கல்வி செயல்திறன் அடிப்படை உள்ளிட்ட பல்வேறு அளவு கோல்களை வைத்து மதிப்பீடு செய்து தமிழக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னை அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக ஆடிட்டோரியத்தில் சனிக்கிழமை நடைபெறும் விழாவில் தமிழக அரசு சாா்பில் இந்தப் பள்ளிகளுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments