மணமேல்குடி ஒன்றியத்தில் மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளுக்கு நடத்தப்பட்ட விளையாட்டு போட்டிகள்!மணமேல்குடி ஒன்றியத்தில் மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் வழிகாட்டுதலின்படி மணமேல்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கோட்டைப்பட்டணம் மீனவர் காலனியில் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டி மற்றும் பரிசு வழங்குதல் பள்ளித் தலைமையாசிரியர் பொறுப்பு செய்தல் பாரூக் முன்னிலையில் தொடங்கப்பட்டது.

இவ்விழாவில் பள்ளி ஆயத்த பயிற்சி மையத்தில் படிக்கின்ற மாணவர்கள் மற்றும் அருகில் உள்ள பள்ளியை சேர்ந்த மாற்றுத்திறன் கொண்ட மாணவர்கள் கலந்துகொண்டு பலூன் உடைத்தல், முறுக்கு கடித்தல், பிஸ்கட் கடித்தல், உயரம் தாண்டுதல், வட்டத்திற்குள் குதித்தல் மற்றும் பிற விளையாட்டுப் போட்டிகளில்  கலந்துகொண்டு மிகுந்த மகிழ்ச்சியுடன்  விளையாடினர்.

போட்டிகளின் முடிவில் மாணவர்களுக்கு தேநீர் சிற்றுண்டி மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது.

மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக மாணவர்களுக்கு சான்றிதழ்கள், பதக்கங்கள் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் ஆசிரியர்கள் மற்றும் சிறப்பு பயிற்றுநர்கள் இயன் முறை மருத்துவர் பள்ளி ஆயத்த பயிற்சி மைய ஆசிரியர், மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments