தவணைத்தொகையை பெற பி.எம்.கிசான் இணைய தளத்தில் விவசாயிகள் ஆதாரை பதிவு செய்ய வேண்டும்
பி.எம்.கிசான் திட்டத்தில் விவசாயிகள் தங்களுக்கு தேவையான வேளாண் இடுபொருட்களை கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசு ஒரு விவசாய குடும்பத்திற்கு ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு 3 தவணைகளாக ரூ.6 ஆயிரம் வழங்கி வருகிறது. இதுவரை இந்த திட்டத்தில் பதிவு செய்த தகுதியான விவசாயிகளுக்கு 12 தவணைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், 13-வது தவணை பெறுவதற்கு தங்களது ஆதார் விவரங்களைக்கொண்டு இ-கே.ஒய்.சி. செய்துகொள்வது அவசியம். மேலும் தங்களது வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துக்கொள்ள வேண்டும். ஏற்கனவே ஆதார் எண்ணுடன் செல்போன் எண்ணை இணைத்துள்ள விவசாயிகள், தங்களது ஆதார் எண் விவரங்களை அருகே உள்ள பொது சேவை மையம் அல்லது தபால் அலுவலகத்தின் தபால் சேவை மூலம் பி.எம்.கிசான் திட்ட வலைதளத்தில் உள்ளீடு செய்ய வேண்டும்.

 மேலும் இனிவரும் தவணை தொகைகள் அனைத்தும் ஆதார் எண் அடிப்படையில் வழங்கப்படும் என்பதனால், பயனாளிகள் அனைவரும் தங்களது வங்கி கணக்கு உள்ள வங்கி கிளையை அணுகி வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துக்கொள்ள வேண்டும் என்று மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments