முத்துப்பேட்டை அருகே நோயாளி இறந்துவிட்டதாக கூறி மருத்துவரிடம் ரூ.2 லட்சம் பணம் பறிப்பு
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த உதயமார்த்தாண்டபுரம் கடைதெரு செருபனையூர் சாலையில் மருத்துவமனை நடத்தி வருபவர் அப்துல் காதர். இவரின் மகன் டாக்டர் இம்ரான்கான் என்பவர் இந்த மருத்துவமனையில் மருத்துவம் பார்த்து வருகிறார்.

இந்த மருத்துவமனைக்கு கடந்த 29ந்தேதி முத்துப்பேட்டை அருகே தில்லைவிளாகம் கிராமத்தை சேர்ந்த பாலசுந்தரி காய்ச்சல் இருப்பதாக கூறி மருத்துவம் பார்த்துவிட்டு சென்றுள்ளார். பின்னர் மறுநாள் 30-ந்தேதி மருத்துவரின் தந்தை அப்துல் காதருக்கு செல்போனில் தொடர்புக்கொண்டு பேசிய ஒருவர் நேற்று அங்குவந்து மருத்துவம் பார்த்த பால சுந்தரி திடீரென இறந்து விட்டார்.

இதனால் உங்களை சும்மா விடமாட்டோம் என்று மிரட்டி உள்ளார். இதை நம்பிய அப்துல் காதர் அவர்களை நேரில் பேச அழைத்துள்ளார். இதைத் தொடர்ந்து சித்தமல்லி கிராமத்தை சேர்ந்த வீரசேகரன்(34), முகேஷ் குமார்(26) ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று அப்துல் காதரிடம் ரூ. 5லட்சம் தர வேண்டும் என்று மிரட்டியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த அப்துல் காதர் ரூ.2 லட்சம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக்கொண்டு திரும்பிய இருவரும் இறுதி சடங்கு செய்துவிட்டு வந்து மீதி தொகை வாங்கி கொள்கிறோம் என்று கூறி சென்றுள்ளனர். பின்னர் மறுநாள் 11ந்தேதி மீண்டும் இருவரும் மருத்துவமனைக்கு வந்து மீதி 3 லட்சம் வேண்டும் என்று கேட்டு மிரட்டி ரூ.50ஆயிரம் அவரிடம் பெற்று சென்றனர்.

இதனால் மன உளைச்சல் அடைந்த அப்துல் காதர் தில்லைவிளாகத்தில் உள்ள நண்பரை தொடர்புக்கொண்டு இதுகுறித்து கூறி விசாரித்த போது பாலசுந்தரி இறந்து போகவில்லை என்று தெரிய வந்தது.

இது குறித்து அபதுல்காதர் முத்துபேட்டை போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பணமோசடியில் ஈடுப்பட்ட வீரசேகரன், முகேஷ் குமார் ஆகியோரை கைது செய்து திருத்துறைப்பூண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர். மேலும் இதில் தொடர்புடைய பால சுந்தரியை போலீசார் தேடி வருகிறனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments