பொன்னமராவதி அருகே ஓடும் பஸ்சில் டிரைவர் திடீர் பலி பயணிகளை காப்பாற்ற பஸ்சை ஓரமாக நிறுத்தினார்




பொன்னமராவதி அருகே ஓடும் பஸ்சில் டிரைவர் திடீரென இறந்தார். பயணிகளை காப்பாற்ற பஸ்சை ஓரமாக நிறுத்தினார்.

அரசு பஸ்

சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூர் ஒன்றியம், படமீஞ்சியை சேர்ந்தவர் குமார் (வயது 41). இவர், புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அரசு போக்குவரத்து பணிமனையில் பஸ் டிரைவராக பணியாற்றி வந்தார். இவர், பஸ்சில் 50 பயணிகளை ஏற்றிக்கொண்டு திண்டுக்கல்லில் இருந்து பொன்னமராவதிக்கு சிங்கம்புணரி வழியாக வந்து கொண்டிருந்தார். மேலைச்சிவபுரியில் உள்ள ஒரு கல்லூரி அருகே வந்த போது குமாருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. தனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை உணர்ந்த அவர் பஸ்சை சாதுர்யமாக ஒரு வளைவில் நிறுத்தினார். பின்னர் அவர் டிரைவர் இருக்கையில் இருந்து கீழே விழுந்தார்.

டிரைவர் பலி

இதற்கிடையே பஸ் திடீரென நின்றதால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து குமாரை பயணிகள் சிகிச்சைக்காக வலையப்பட்டி பாப்பாயி ஆச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். மேலும் மாற்று டிரைவர் மூலம் பஸ்சை பொன்னமராவதி பஸ் நிலையத்திற்கு ஓட்டி செல்லப்பட்டது. டிரைவருக்கு ெநஞ்சுவலி ஏற்பட்டும், தனது உயிரை கொடுத்து 50 பயணிகளை காப்பாற்றி உள்ளார். டிரைவர் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. உயிரிழந்த அரசு பஸ் டிரைவர் குமாருக்கு, மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர்.

பணியின் போது இறந்த பஸ் டிரைவர் குமாரின் குடும்பத்திற்கு அரசு சார்பாக ரூ.5 லட்சமும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு வேலை மற்றும் தொழிலாளர்கள் தரப்பில் ரூ.7 லட்சத்து 20 ஆயிரம் வழங்கப்படும் என புதுக்கோட்டை போக்குவரத்து பணிமனை பொது மேலாளர் குணசேகரன் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments