குளுகுளு குளிர்...! ஊட்டியாக மாறிய கோபாலப்பட்டடிணம்






குளுகுளு குளிர்...! கோபாலபட்டிணம் ஊட்டியாக மாறியது!!

தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை கடந்த மாதம் தொடங்கிய நிலையில், இயல்பை விட 3 சதவிகித மழை குறைவாக பெய்துள்ளது. இந்தநிலையில் தென்மேற்கு வங்க கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலமானது தற்போது மாண்டஸ் புயலாக வலுப்பெற்றுள்ளது. மாண்டஸ் புயல் வடமேற்கு திசையில் மணிக்கு 10 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் இந்தப் புயலானது , காரைக்காலுக்கு தென்கிழக்கில் 560 கிலோமீட்டர் தொலைவிலும் , சென்னைக்கு தென்கிழக்கில் 640 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

தமிழகம் புதுவை மற்றும் தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதியை நோக்கி நெருங்கி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளைய தினம் (9ஆம் தேதி) நள்ளிரவு புதுச்சேரிக்கும் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா விற்கும் இடையே 65 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 85 கிலோ மீட்டர் வேகத்திலும் பலத்த காற்றுடன் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இன்று கடலோரப் பகுதிகளில் கன முதல் மிக கனமழையும் நாளை தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் மிக முதல் அதிக கனமழையும் பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 










இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணி புரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் இன்று டிசம்பர் 08 காலை முதல் குளிர் அதிகரித்துள்ளது. அவ்வப்போது லேசான மழையுடன் அதிக அளவிலான குளிர் நிலவி வருகிறது. இதனால், கோபாலப்பட்டிணம் முழுவதும் காலை முதல் ஊட்டி போல் குளுகுளுவென குளிர்ந்த நிலையில் உள்ளது. 

இதனால், கோபாலப்பட்டிணம் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.




புயல் காரணமாக கோபாலப்பட்டிணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மதியம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

 ☔️லேசான தூறல்
 🌪️மிதமான காற்று
🌦️குறைவான வெளிச்சம்
🥶நடுக்கம் இல்லாத குளிர்
🌦️சூரியன் வெளிவராத வானம்
☁️கண்ணுக்கு தெரியாத மேகம்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...





Post a Comment

0 Comments