மீன்வள மேம்பாட்டு திட்டம் குறித்து விழிப்புணர்வு முகாம்
மணமேல்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டம் குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமில் மீன்வளத்துறை உதவி இயக்குனர் சின்ன குப்பன் கலந்து கொண்டு பிரதம மந்திரி மீன்வளம் மேம்பாட்டு திட்டம் குறித்து மீனவர்களுக்கு விளக்கம் அளித்தார். மீன்வள மேம்பாட்டு திட்ட மேலாளர் குயிலி கலந்து கொண்டு பேசுகையில், மத்திய அரசு மீனவர்களுக்கு வழங்கியிருக்கும் சலுகைகள் குறித்து எடுத்துரைத்தார். மேலும் மீனவர்கள் கடலில் பாசி வளர்த்தல், கூண்டு மூலம் மீன்கள் வளர்த்தல், நன்னீரில் மீன்கள் வளர்த்தல் ஆகியவற்றைக்கு அரசு மானியம் தருகிறது. இதனை மீனவர்கள் பயன்படுத்தி கொண்டு தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். மீன்பிடி படகு செய்யவும் அரசு மானியம் தருகிறது. இதனை மீனவர்கள் பயன்படுத்தி கொள்ளும்படி கூறினார். முகாமில் வட்டார வளர்ச்சி அலுவலர் முத்து, அமலாக்கத்துறை இன்ஸ்பெக்டர் முத்து, மீனவர்கள் மற்றும் மணமேல்குடி சுற்றுவட்டார பகுதியில் உள்ள மகளிர் சுய உதவி குழுவினர்கள் கலந்து கொண்டனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments