சென்னை- யாழ்ப்பாணம் இடையே 3 ஆண்டுகளுக்குப்பின் பயணிகள் விமான சேவை தொடங்கியது





சென்னையில் இருந்து இலங்கையின் யாழ்ப்பாணம் நகருக்கும் இடையே 3 ஆண்டுகளுக்குப்பின்  மீண்டும் பயணிகள் விமானப் போக்குவரத்து தொடங்கியது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக யாழ்ப்பாணம்-சென்னை இடையே விமானப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. ஆனால், தற்போது கொரோனா பரவல் முற்றிலும் குறைந்து, இயல்புநிலைக்கு வந்துவிட்டநிலையில், இலங்கை அரசு பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் மீண்டும் விமானப் போக்குவரத்தைத் தொடங்கியுள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு யாழ்பாணம் சர்வதேச விமானநிலையமாக மாற்றப்பட்டது. சென்னையில் இருந்துதான் முதல்முதலாக சர்வதேச விமானம் தரையிறங்கியது. யாழ்பாணம் விமானநிலையத்தை மேம்படுத்த இந்திய அரசு பெரும்பகுதி நிதியுதவி அளித்திருந்தது

டாடாவின் ஏர் இந்தியாவுக்கு முன் ஏர் இந்தியா-சென்னை விமானம் வாரத்துக்கு 3 நாட்கள் இயக்கப்பட்டது. 2019ம் ஆண்டு இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டபின் யாழ்ப்பாணம்-சென்னை விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது .

இந்நிலையில் 3 ஆண்டுகள் இடைவெளியில் இன்று விமானப் போக்குவரத்து தொடங்கியது. இன்று காலை சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு அலையன்ஸ் விமானநிறுவனத்தின் விமானம் 14 பயணிகளுடன் புறப்பட்டு 11.25 மணிக்கு யாழ்ப்பாணம் சென்று அடைந்தது. 






சிறிய அளவில் வரவேற்பு விழா நடத்தப்பட்டு பயணிகள் வரவேற்கப்பட்டனர். யாழ்ப்பாணத்தில் இருந்து பிற்பகல் 2.50 மணிக்கு மீண்டும் சென்னைக்கு விமானம் புறப்படும்.சென்னை யாழ்ப்பாணம் இடையே வாரத்துக்கு 4 நாட்கள் விமானச் சேவை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இலங்கை விமானப் போக்குவரத்து மற்றும் சேவைப்பிரிவின் தலைவர் உபுல் தர்மதசா கூறுகையில் “ சென்னையில் இருந்து புறப்பட்ட விமானம் யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தது”எனத் தெரிவித்தார்.
இலங்கையில் ஏற்கெனவே 2 சர்வதேச விமானநிலையங்கள் இருக்கும் நிலையில் 3வது சர்வதேச விமானநிலையம் யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலே விமானநிலையமாகும். 

இலங்கை அரசின் இந்த நடவடிக்கையால், சுற்றுலாத்துறை வளர்ச்சி அடையும், பொருளாதாரம் வளரும் என்று அரசு நம்புகிறது. இலங்கைப் பொருளதாரத்தின் வளர்ச்சி பெரும்பகுதி சுற்றுலாத்துறையை நம்பித்தான் இருக்கிறது, அந்நியச் செலாவணியும் சுற்றுலாத்துறை மூலமே கிடைக்கிறது.

இலங்கையில் பொருளாதார சிக்கலுக்குப்பின், கடந்த சில மாதங்களாக சுற்றுலாப் பயணிகள் மீண்டும் வரத் தொடங்கியுள்ளனர். இதனால், நவம்பரில் இலங்கைக்கு சுற்றுலா மூலம்10.75 கோடி டாலர்கள் கிடைத்துள்ளது. ஒட்டுமொத்தமாக கடந்த 11 மாதங்களில் 112.94 கோடி டாலர் அந்நியச் செலாவணி கிடைத்துள்ளது என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments