தஞ்சாவூர் அருகே டூத்பேஸ்ட் என நினைத்து எலி பேஸ்ட்டால் பல் துலக்கிய நபர் உயிரிழப்பு




டூத் பேஸ்ட் என நினைத்து எலிபேஸ்டால் பல் துலக்கிய வாலிபர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

தஞ்சாவூர் அருகே கொல்லாங்கரை பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 31) இவர் தனது உறவினர் வீட்டில் தங்கி இருந்து வயல் வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஐந்தாம் தேதி அங்குள்ள அறையில் இருந்த எலியை கொள்வதற்காக வைத்திருந்த எலிப்பேஸ்டை டூத் பேஸ்ட் என நினைத்து பல் துலக்கியுள்ளார்.

சிறிது நேரத்தில் அவருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்று வலியும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உறவினர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது மருத்துவர்கள் கேட்டபோது, "தவறுதலாக எலிப்பேஸ்டை பயன்படுத்தி பல் துலக்கிய தாக" தெரிவித்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வல்லம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கார்த்திகேயன் உடல் உடற்கூறாய்வுக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது,. எலிபேஸ்ட் விற்பனைக்கு தமிழக அரசு தடை விதித்த போதிலும் கடைகளில் திருட்டுத்தனமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது என கூறப்படுகிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments