மனோராவில் 15 ஆயிரம் பனை விதைகள் நடவு







பட்டுக்கோட்டை மனோரா கடற்கரையில் 15 ஆயிரம் பனை விதைகள் விதைப்பு - 6 கல்லூரியைச் சேர்ந்த 500 க்கு மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மனோரா கடற்கரையில்
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்டம், ஓம்கார் பவுண்டேசன், இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி, மனோரா ரோட்டரி கிளப், பட்டுக்கோட்டை விதை அறக்கட்டளை, கைஃபா கடைமடை பகுதி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கம், கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு ஆகியவை இணைந்து டெல்டா மாவட்ட கடற்கரை பகுதிகளில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் 5 இலட்சம் பனை விதைகள் விதைக்கும் பணி தொடக்கவிழா இன்று பட்டுக்கோட்டை அருகே உள்ள மனோரா கோட்டை கடற்கரையில் நடைபெற்றது. 

இதில் தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 6 கல்லூரிகளிலிருந்து 500 க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணித்திட்ட மாணவ, மாணவியர் பங்கேற்று பனை விதைகளை கடற்கரையோரங்களில் நட்டனர். முன்னதாக பனை விதைகள் விதைக்கும் பணியை மாவட்ட வனத்துறை அலுவலர் அறிவொளி, நாட்டு நலப்பணித்திட்ட மாநில அலுவலர் முனைவர் செந்தில்குமார், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் இலக்குமி பிரபா உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சடையப்பன், கிருஷ்ணமூர்த்தி, பட்டுக்கோட்டை ரெட் கிராஸ் சேர்மன் சாமிநாதன், ஓம்கார் பவுண்டேஷன் டாக்டர் பாலாஜி, ஊராட்சி மன்ற தலைவர்கள் ஜலிலா பேகம் முகமது அலி ஜின்னா, ராம்ப்ரசாத் மற்றும் கைஃபா நிர்வாகிகள் பிரபாகர் கார்த்திகேயன் பலர் கலந்து கொண்டனர்.









எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments