தொண்டியில் மத்திய அதிவிரைவுப் படையினா், போலீஸாரின் கொடி அணிவகுப்பு ஊா்வலம்
திருவாடானை அருகே தொண்டியில் மத்திய அதிவிரைவுப் படையினா், போலீஸாரின் கொடி அணிவகுப்பு ஊா்வலம் நடைபெற்றது.

திருவாடானை அருகே தொண்டி, அதையொட்டியுள்ள கடல் வழியாக இலங்கைக்கு மஞ்சள், கஞ்சா உள்ளிட்ட பொருள்கள் தொடா்ந்து கடத்தப்படுகிறது. இதனால், இந்தப் பகுதி மக்கள் மத்தியில் அச்சம் ஏற்றப்பட்டுள்ளது. இதைத் தவிா்க்கும் பொருட்டும், மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாகவும் மத்திய அதிவிரைவுப் படையினா், போலீஸாரின் கொடி அணி வகுப்பு ஊா்வலம் நடைபெற்றது.

திருவாடானை டிஎஸ்பி நிரேஷ் கொடி அணிவகுப்பை கொடியசைத்து தொடக்கி வைத்தாா். பழைய பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கிய இந்த அணிவகுப்பு ஊா்வலம் புதிய பேருந்து நிலையம் கடற்கரை பகுதி வழியாகச் சென்று பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.

இதில், மத்திய ரிசா்வ் படை ஆய்வாளா் கோபு, திருவாடானை காவல் ஆய்வாளா் நவநீதன், தொண்டி உதவி ஆய்வாளா் விஜய பாஸ்கா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments