புதிய அரிமளம் தாலுகாவில் ஏம்பல் பிர்கா 5 பஞ்சாயத்தை இணைக்கக்கூடாது பொதுமக்கள் கடும் எதிர்ப்பு


அரிமளத்தில் இணைக்கக்கூடாது ஏம்பல் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

ஆவுடையார்கோவில் தாலுகாவை சேர்ந்த ஏம்பல் கிராமத்தில் 8 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இதை சுற்றி திருவாக்குடி, மதகம், குருங்களூர், இரும்பாநாடு ஆகிய கிராம ஊராட்சிகள் உள்ளன. இப்பகுதி மக்கள் வசதிக்காக வருவாய் ஆய் வாளர் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள ஆவுடையார்கோவிலில் தாலுகா அலுவலகம் உள்ளது. 

இதற்கிடையே புதிதாக உருவாக்கப்பட திட்டமிடப்பட்டுள்ள அரிமளம் தாலு காவில் ஏம்பல் பிர்கா இணைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியானது. 

இதனால் அதிர்ச்சியடைந்த ஏம்பல்  பகுதி மக்கள், 32 கிலோமீட்டர் தின  தூரமுள்ள அரிமளத்துடன்  இணைத்தால் பயண நேரம், செலவு கூடுதலாகும். எனவே தங்கள் பகுதியை அரிமளம் தாலுகாவுடன் இணைக்க  வேண்டாம் என்று கலெக்டருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments