மீமிசல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு கலை நிகழ்ச்சி போட்டிகள்


மீமிசல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு கலை நிகழ்ச்சி போட்டிகள் நடைபெற்றது.
 
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மீமிசலில் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாணவ மாணவியர்களுக்கான கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. மீமிசல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், வட்டார மேற்பார்வையாளர் செல்வராஜ் தலைமை வகித்தார். பள்ளித் தலைமை ஆசிரியர் ஜெகதீசன் முன்னிலை வகித்தார்.விழாவில் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளோடு சக மாணவர்கள் இணைந்து நடனம், பாட்டு, கவிதைகள் வாசிப்பது போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
 
விழாவில் ஒன்றியக்குழு உறுப்பினர் ரமேஷ், ரோட்டரி சங்க நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக விழாவை முன்னிட்டு மாணவ, மாணவியர்களுக்கான நடைபெற்ற ஓட்டப்பந்தயம், பாட்டிலில் நீர் நிரப்புதல், முறுக்கு கடித்தல், இசை நாற்காலி, பந்து தூக்கி எறிதல் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள், நினைவுக்கேடயம், பரிசுகள் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை வட்டார ஒருங்கிணைப்பாளர் சிறப்பு பயிற்றுனர்கள், இயன்முறை மருத்துவர் ஆகியோர் செய்திருந்தனர். வட்டார ஒருங்கிணைப்பாளர் குணசீலன் கூறினார்.

நன்றி: மாலைமலர் 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments