அதிகாலையில் நிகழ்ந்த பயங்கரம்; சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை கோர விபத்தில் 6 பேர் உயிரிழப்பு!அதிகாலையில் நடந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே 6 பேர் உயிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த ஜானகிபுரம் பகுதியில், சென்னையை நோக்கி, திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் டாட்டா ஏசி சென்று கொண்டிருந்தது. இந்த டாட்டா ஏசி வாகனத்தில், 15க்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர். இந்த டாட்டா ஏசி வாகனம் ஆனது, திடீரென ஜானகிபுரம் பகுதியில் முன்னே சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது மோதியுள்ளது.

விபத்தால் நிலைகுலைந்த டாட்டா ஏசி வாகனத்தின் மீது,  பின்னால், வந்து கொண்டிருந்த கனரக வாகனம் ஒன்றும் மோதியுள்ளது.  இந்த கோர சம்பவத்தில் இரண்டு வாகனங்களுக்கு இடையே சிக்கியுள்ளது.

இதனால் டாட்டா ஏசியில் பயணித்த, ஓட்டுனர் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அதிகாலையில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கோவிலுக்கு சென்று டாட்டா ஏசியில் திரும்பிய பொழுது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது. இது குறித்து தொடர்ந்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments