வட தமிழகம் நோக்கி வரும் மாண்டஸ் புயல் - புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்! மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆய்வாளர் எச்சரிக்கை!!



வட தமிழகம் நோக்கி வரும் மாண்டஸ் புயலால் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆய்வாளர் எச்சரித்துள்ளார்.

வங்க கடலில் இன்று 07.12.2022 முதல் குறைந்த காற்றழுத்தம் தாழ்வுநிலை மண்டலம் உருவாக வாய்ப்புள்ளதால் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 07.12.2022 இன்று முதல் மறு அறிவிப்பு வரும்வரை மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என மணமேல்குடி  மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆய்வாளர் நா.ஆரத்தீஸ்வரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,

இந்திய வானிலை ஆய்வு துறை மண்டல வானிலை ஆய்வு மையம், சென்னை மைய அறிவிப்பின்படி வங்க கடலில் 07.12.2022 குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதால் மீனவர்கள் கீழ்காணும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.

1. இன்று முதல் (07.12.2022) மறு அறிவிப்பு வரும்வரை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல கோண்டாம். ஏற்களவே மீன்பிடிக்கச்சென்றிருக்கும் மீன்வர்களுக்கு உடன் தகவல் அலுப் படகு மற்றும் மீனவர்கள் கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறது. 2

3. புயல் முன்னெச்சரிக்கையினைத் தொடர்ந்து கடற்கரையோரத்தில் உள்ள தங்களது மீன்பிடி படகுகளை கரையிலிருந்து 100 முதல் 500 மீட்டர் வரை கரைக்கு கொண்டு வந்து வைத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது. 4. மீன்பிடித்துறைமுகம் மற்றும் மீன்பிடி இறங்குதளங்களில் நிறுத்தப்படும் படகுகள் படகின் இருமுனைகளிலும் நன்றாக இறுக்கமாக கயிறு கட்டி ஒன்றொடுன்று உரசாமல்

பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது. 5. இயந்திரம், மீன்பிடி வலைகள் மற்றும் இதர உபகரணங்களை வீட்டிற்கு எடுத்து வந்து பாதுகாப்பான இடத்தில் வைத்திருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 6. புயலின் போது மீனவர்கள் அருகிலுள்ள புயல் பாதுகாப்பு மையத்திற்கு சென்று பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments