திருத்துறைப்பூண்டி அருகே கிழக்கு கடற்கரை சாலையில் தானியங்கி சோலார் சிக்னல் விளக்குகள் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

 
திருத்துறைப்பூண்டி அருகே கிழக்கு கடற்கரை சாைலயில் தானியங்கி சோலார் சிக்னல் விளக்குகள் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  
 திருத்துறைப்பூண்டி அருகே கிழக்கு கடற்கரை சாைலயில் தானியங்கி சோலார் சிக்னல் விளக்குகள் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிழக்கு கடற்கரை சாலை திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகரின் மையப்பகுதியில் கிழக்கு கடற்கரை சாலை உள்ளது. இந்த சாலை வழியாக சென்னையில் இருந்து நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, வழியாக தூத்துக்குடி, கேரளா, திருச்செந்தூர், கன்னியாகுமரி, உள்ளிட்ட பகுதிகளுக்கு மக்கள் சென்று வருகிறார்கள். இதைப்போல கேரளா, திருவனந்தபுரம், மற்றும் தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருச்செந்தூர், ராமநாதபுரம், உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த மக்கள் நாகை மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற வேளாங்கண்ணி, நாகூர் தர்கா, உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல இந்த சாலையை பயன்படுத்துகிறார்கள். சோலார் சிக்னல் மின்விளக்குகள் மேலும் காரைக்கால் மீன்பிடி துறைமும் மற்றும் நாகப்பட்டினம் , வேளாங்கண்ணி, செறுதூர் பகுதியில் பிடிக்கப்படும் மீன்கள் கேரளா மற்றும் வெளிநாடுகளுக்கு வாகனங்களில் அதிக அளவில் இந்த சாலை வழியாக கொண்டு செல்லப்படுகிறது. திருத்துறைப்பூண்டி நகரத்திலிருந்து வேதாரண்யம் செல்லும் வாகனங்கள் இந்த சாலையை தாண்டி தான் செல்ல வேண்டும். இந்த சாலையில் இருசக்கர மற்றும் 4 சக்கர வாகனங்களில் செல்வோர் அதிக அளவில் விபத்துகளில் சிக்குகிறார்கள். எனவே இந்த இடத்தில் சோலார் சிக்னல் மின்விளக்குகள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

விபத்துகள் இது குறித்து திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த வக்கீல் செல்லபாண்டியன் கூறியதாவது:-

 திருத்துறைப்பூண்டி கிழக்கு கடற்கரை சாலை மிகவும் ஆபத்தான ஒரு இடமாக உள்ளது. வேதாரண்யம் செல்லும் வாகனங்கள் அதிக அளவில் இந்த பகுதியில் விபத்தில் சிக்குகின்றன. மேலும் இருசக்கர வாகனத்தில் செல்வோரும் இந்த இடத்தை கடந்து செல்லும் பொழுது மிகுந்த சிரமத்துடன் கடந்து செல்கிறார்கள். கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து 4 சக்கர வாகனங்களில் வருபவர்கள் இந்த இடத்தில் வரும் பொழுது விபத்து ஏற்படுகிறது. எனவே புதிய சோலார் தானியங்கி விளக்குகள் அமைத்தால் விபத்துக்களை தவிர்க்க முடியும். எனவே கூடுதலாக சோலார் சிக்னல் விளக்குகள் அமைத்து விபத்துக்களை தடுக்க வேண்டும்
 
திருத்துறைப்பூண்டி மரியதாஸ்:-
 
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி கிழக்கு கடற்கரை சாலையில் அதிக அளவில் வாகனங்கள் கடந்து செல்கின்றன. குறிப்பாக வேதாரண்யம் செல்லும் வாகனங்கள் திருத்துறைப்பூண்டியில் இருந்து வேதாரண்யம் செல்லும் பொழுது கிழக்கு கடற்கரை சாலை ரவுண்டானாவை கடந்து செல்ல வேண்டி உள்ளது. அப்போது அந்த இடத்தில் விபத்துக்கள் அதிகம் ஏற்பட வாய்ப்பு ஏற்படுகிறது. எனவே கூடுதலான தானியங்கி சோலார் விளக்குகள் அந்த இடத்தில் அமைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments