மணமேல்குடி ஒன்றியத்தில் பள்ளி செல்லாக் குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது




மணமேல்குடி ஒன்றியத்தில் பள்ளி செல்லாக் குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.

புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் வழிகாட்டுதலின்படி
மணமேல்குடி ஒன்றியத்தில் பள்ளிச் செல்லாக் குழந்தைகளை கண்டறிந்து பள்ளியில் சேர்க்கும் நிகழ்வு இன்று மணமேல்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட குடியிருப்புகளில் மணமேல்குடி வடக்கூர் குடியிருப்பில் இருந்து தொடங்கப்பட்டது. 

6 முதல் 18 வயது உடைய பள்ளி செல்லா குழந்தைகளை மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை கண்டறியும் கணக்கெடுப்பு பணி மணமேல்குடி வடக்கூர் கிராமத்தில் இருந்து தொடங்கியதில் மணமேல்குடி
அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் ஸ்ரீராம் என்ற மாணவனை கண்டறியப்பட்டது.

இதேபோல் இக்கணக்கெடுப்பு பணியானது
 19 12.2022 முதல்
 11 1.2023 வரை தொடர்ந்து நடைபெற்று வரும்.

இக்களப்பணியில் ஆசிரியர் பயிற்றுநர்கள் சிறப்பு ஆசிரியர்கள் தன்னார்வலர்கள் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் இயன்முறை மருத்துவர்கள் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் ஆகியோர் ஈடுபடுவார்கள்.

இன்று நடைபெற்ற களப்பணியில் மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர் மதிப்புக்குரிய திரு.செழியன் அவர்கள் மணமேல்குடி வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு திருமதி சிவயோகம் ஆசிரியர் பயிற்றுநர்கள் முத்துராமன் வேலுச்சாமி அங்கையற்கண்ணி சிறப்பு ஆசிரியர்கள் மணிமேகலை கோவேந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.



எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments