மணமேல்குடி ஒன்றியத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் தொடர்பான தன்னார்வலர்களுக்கு இரண்டு நாள் பயிற்சி தொடங்கியது.





மணமேல்குடி ஒன்றியத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் தொடர்பான தன்னார்வலர்களுக்கு இரண்டு நாள் பயிற்சி தொடங்கியது.

புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதிப்பிற்குரிய 
சே மணிவண்ணன் அவர்களின் வழிகாட்டுதலின்படி 
 மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர் மதிப்புக்குரிய திரு.செழியன் அவர்களின் தலைமையில் 
புதிய பாரத திட்டத்திற்கான தன்னார்வலர்களுக்கு இரண்டாம் பயிற்சி தொடங்கி வைத்தார்.

மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர் மதிப்புக்குரிய திருமதி இந்திராணி அவர்கள் மற்றும் மணமேல்குடி வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு திருமதி சிவயோகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

*மாநில பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கத்தில் இருந்து கற்போர் விவரங்களை சேகரித்து மையங்களை உருவாக்கிட அறிவுறுத்தப்பட்டது.

மணமேல்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட 35 மையங்கள் புதிய பாரத திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டு இதுவரை 620 கற்போர்கள் விவரம் சேகரிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இப் பயிற்சியில் கலந்து கொண்ட தன்னார்வலர்களுக்கு,
 கற்போருக்கு வாசிக்க எழுத கற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் தன்னுடைய கையெழுத்தை போடுவதற்கும் , தன்னுடைய ஊர் பெயர் ,குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் பெயர்கள், சிறு சிறு வார்த்தைகளை எழுத வைத்தல் போன்றவற்றை பயிற்சி கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்
கொள்ளப்பட்டது.

இப்ப பயிற்சியில் 35 தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

 இப்பயிற்சியில் ஆசிரியர் பயிற்றுநர்கள் முத்துராமன் வேல்சாமி மற்றும் அங்கையற்கண்ணி ஆகியோர் கருத்தாளராக செயல்பட்டனர்.




எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments