கோபாலப்பட்டிணத்தில் திடீர் மழை - பொதுமக்கள் மகிழ்ச்சி!கோபாலப்பட்டிணத்தில்‌ திடீர் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி உருவாக வாய்ப்புள்ளதாக நேற்று முன்தினம் சென்னை வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணி புரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே கோபாலப்பட்டிணத்தில் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இன்ற  டிசம்பர் 03 சனிக்கிழமைகாலை 11.30 மணிக்கு திடீரென மழை பெய்தது. கால் மணி நேரம் தீடீர் மழை பெய்தது. பிறகு வெயில் அடிக்க தொடங்கியது பின்னர் மதியம் 3.30 மணியளவில் மறுபடியும் மழை பெய்தது ..இந்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

மழை பெய்தது நெடுங்குளம் காட்டுக்குளம் முழுவதும் நிரம்ப வேண்டும் கோபாலப்பட்டிணம் மக்கள் ஏக்கமாக உள்ளது..

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...

Post a Comment

0 Comments