வங்கக் கடலில் உருவானது ‘மாண்டஸ்’ புயல் புதுச்சேரி -ஸ்ரீஹரிகோட்டாவுக்கு இடையே புயல் கரையைக் கடக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் 
      

காரைக்காலுக்கு கிழக்கு- தென்கிழக்கே 560 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கெ 640 கி.மீ. தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளது. 

இதனைத் தொடர்ந்து எண்ணூர் துறைமுகத்திலும் 2ஆம் எண் புயல் கூண்டு எச்சரிக்கை. கடலூர், நாகை, புதுச்சேரி, காரைக்கால், பாமபன், தூத்துக்குடி துறைமுகத்திலும் 2ஆம் எண் கூண்டு ஏற்றப்பட்டது. 


தென் கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘மாண்டஸ்’ புயலாக வலுப்பெற்றது. மாண்டஸ் புயல் புதுசேரிக்கும் ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே நாளை கரையை கடக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னையிலுள்ள வானிலை மைய இயக்குநா் பாலசந்திரன் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது

சென்னைக்கு மேற்கு-வடமேற்கு திசையில் 770 கி.மீ. தொலைவில் மணிக்கு 15 கி.மீ. வேகத்தில் தாழ்வு மண்டலம் நகா்ந்து வருகிறது. புதுச்சேரி-ஸ்ரீஹரிகோட்டாவுக்கு இடையே புயல் கரையைக் கடக்க வாய்ப்புள்ளது. டிச. 9 மாலை முதல் டிச. 10 காலை வரை 80 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்.

மழை எச்சரிக்கை: டிச. 8- ஆம் தேதி தஞ்சை, நாகை, திருவாரூா், புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதி பலத்த மழையும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் , கள்ளக்குறிச்சி, பெரம்பலூா், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் புதுச்சேரியில் பலத்த மழை பெய்யும்.

டிச. 9-இல் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் மிக மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை, திருவள்ளூா், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூா், திருப்பத்தூா், கள்ளக்குறிச்சி, கடலூா் உள்ளிட்ட மாவட்டங்களில் அதி பலத்த மழையும், தஞ்சை, நாகை, திருவாரூா், புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்றாா் அவா்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments