பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில் சரக்கு கொட்டகை (Goods shed) செயல்பட தெற்கு ரயில்வே அனுமதி




தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை பகுதியில் ரயில்களில் சரக்கு போக்குவரத்தை கையாளும் வகையில் குட்ஷெட் யார்ட் அமைக்க வேண்டும் என பட்டுக்கோட்டை பகுதி விவசாயிகள், வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் ரயில்வே வாரியத்தின் ஒப்புதலுடன் ரூபாய் 5 1/2 கோடி ஒதுக்கீடு செய்து கடந்த 2019 ஆம் ஆண்டு அதற்கான கட்டுமான பணிகள் தொடங்கின. நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட காரணங்களால் பணிகள் தாமதமாகி வந்த நிலையில் கடந்த அக்டோபரில் பணிகள் நிறைவு பெற்றன. 

இதைத் தொடர்ந்து உடனடியாக இந்த ரயில்வே குட்செட் யார்டை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என ரயில்வே வாரியம் அண்மையில் அனுமதி வழங்கியது. 

இதனால் முத்துப்பேட்டை அதிராம்பட்டினம் பகுதியில் உற்பத்தி செய்யப்படும் உப்பு மற்றும் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் மற்ற பகுதிகளுக்கு கொண்டு செல்ல பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.









எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments