கோபாலப்பட்டிணம் காட்டுகுளம் மற்றும் நெடுங்குளத்தின் படித்துறையில் உடைத்து வீசப்படும் மதுபாட்டில்கள்.! ஜமாத் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!!
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்டது கோபாலப்பட்டிணம் கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 1500 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கோபாலப்பட்டிணம் கிராமமானது நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியில் அதிக மக்கள் தொகை கொண்ட பெரிய கிராமமாகும். நெடுங்குளம் இந்த கிராமத்தில் உள்ள குளங்களில் மிகப்பெரிய குளமாகும்.  இந்த குளத்தின் கரையோரத்தில் அப்பகுதியில் உள்ள மக்களின் பயன்பாட்டிற்காக படித்துறை கட்டப்பட்டள்ளது.

இந்த படித்துறையை கபுரஸ்தானுக்கு (மையவாடிக்கு) வரும் பொதுமக்கள் மட்டுமின்றி அப்பகுதியை சேர்ந்த மக்கள் குளிப்பதற்கும், துணிகளை துவைப்பதற்கும் பயன்படுத்தி வருகின்றனர். 

பாட்டில்களை உடைத்து வீச்சு

பொதுமக்கள் குளிப்பதற்கு பயன்படுத்தும் இந்த படித்துறையை இரவு நேரங்களில் ஒரு சிலர் மது அருந்தும் கூடாரமாக பயன்படுத்தி வருகின்றனர்.  இரவு நேரங்களில் இந்த படித்துறையில் அமர்ந்து மது அருந்திவிட்டு, பின்னர் மது பாட்டில்களை  மது போதையில்   அங்கேயே சுக்கு நூறாக உடைத்து வீசி விட்டும் சென்று விடுகின்றனர் இப்படி செய்வதால் இதனை பயன்படுத்தும் கிராம மக்கள் அதனால் பாதிக்கப்பட கூடும் என அச்சம் தெறிவித்துள்ளனர்.

கபுரஸ்தானுக்கு வருபவர்கள் மற்றும்  மக்கள் படித்துறையில் இறங்கி குளிக்க செல்லும் போது படித்துறைகளில் மற்றும் குளத்திற்குள் உள்ள உடைந்த பாட்டில்கள் கால்களில் குத்தி காயத்தை ஏற்படுத்தும்.  படித்துறையில் மது பாட்டில்களை உடைத்து வீசுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உடைந்து கெடக்கும் மது பாட்டில்களை  அப்புறப்படுத்தவும் மேலும்  இரு குளங்களையும் பாதுகாக்கவும் கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் குளத்து மேடு மற்றும் சாலை ஓரங்களில் மது அருந்தி விட்டு வீசப்படும் பாட்டில்களால் வெளியூரில் இருந்து வரக்கக்கூடிய நபர்களை முகம் சுளிக்கவும் வைத்து விடுகின்றது. 

தற்போது இரண்டு குளங்களில் தண்ணீர் இல்லாததால் மது பாட்டில்கள் குளத்தில் கரையோர மணல் பகுதியில் கிடக்கிறது . நாளைடைவில் மழை பெய்து குளங்கள் நிரம்பி மக்கள் பயன்பாட்டிற்கு வரும் போது யார் காலிலாவது உடைந்து கெடக்கும் மது பாட்டில்கள் கிழித்து விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது..

ஆகவே மக்களின் நலன் கருதி குளத்து பகுதிகளில் மற்றும் பொது இடங்களில் அமர்ந்து மது அருந்துபவர்கள் மீது ஊர் ஜமாத் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்  ஊர் மக்களின் கோரிக்கையாகவும் உள்ளது. 

மது வீட்டிற்கும், நாட்டிற்கும் கேடு...
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments