அதிகாரிகள் வாக்குறுதியை தொடர்ந்து ஆவுடையார் கோவில் கடைவீதியில் சாலைமறியல் கைவிட்ட கம்யூனிஸ்ட்




புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் கடைவீதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக சாலை மறியல் நடைபெற இருந்த  நிலையில் வட்டாட்சியர் சமாதான கூட்டத்தின் மூலம் கோரிக்கை நிறைவேற்ற உறுதி கொடுத்ததால் மறியல் கைவிடப்பட்டது

ஆவுடையார் கோவில் தாலுகா புண்ணியவயல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கிளையின் சார்பாக சாலை வசதி, மயானச் சாலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் செய்யப் போவதாக அறிவித்திருந்தார்கள். சாலை மறியல் நடைபெற இருந்த நிலையில் ஆவுடையார் கோவில் வட்டாட்சியர் வில்லியம்ஸ் மோசஸ் சமாதான கூட்டத்திற்கு அழைத்தார். வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சமாதான கூட்டத்தில் புண்ணிய வயல் தலித் குடியிருப்பு செல்லக்கூடிய சாலை. மயானச் சாலை உள்ளிட்ட கோரிக்கையை நிறைவேற்றி தருவதாக ஆவுடையார் கோவில் வட்டாட்சியர் உறுதி கொடுத்ததால் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது .சமாதான கூட்டத்தில்  ஆவுடையார் கோவில்காவல்துறை ஆய்வாளர் உதவி, ஆய்வாளர்,மற்றும் புண்ணியவயல் கிராம நிர்வாக அலுவலர். ஆவுடையார் கோவில் வருவாய் ஆய்வாளர், மற்றும் ஊராட்சி ஒன்றிய வளர்ச்சி அலுவலர்  மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் செங்கோடன், ஆவுடையார் கோவில் ஒன்றிய செயலாளர் .வி. கே. காமாட்சி, சிபிஐ மாவட்ட குழு உறுப்பினர் ஆர். ராமசுப்பிரமணியன் .விசா மாவட்ட குழு உறுப்பினர் சேவுகப்பெருமாள். இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் ராஜேந்திரன். உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் 
முகம்மது யாசின்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments