திருச்சி - புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் கார்-மோட்டார் சைக்கிள் மோதல்; 3 பேர் படுகாயம்




ஆந்திர மாநிலம் முர்திபள்ளி பகுதியை சேர்ந்தவர் தேஜா. இவர் ஒரு காரில் ராமேசுவரம் சென்று விட்டு மீண்டும் தனது சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தார். புதுக்கோட்டை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பொம்மாடிமலை என்னும் இடத்தில் சென்றபோது கார் எதிரே வந்த மோட்டார் சைக்கிளில் மோதியதாக கூறப்படுகிறது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த சத்தியமங்கலத்தை சேர்ந்த சுதர்சன் (வயது 23), முத்துக்கருப்பன் (38), சந்துரு (30) ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இதைப்பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வெள்ளனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments