கோபாலப்பட்டிணம் அவுலியா நகர் பகுதியில் தேங்கி இருக்கும் சாக்கடை கழிவுகளை அகற்ற சிபிஎம் மாநில குழு உறுப்பினர் வேண்டுகோள்!



புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டானி புரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே கோபாலப்பட்டிணம் அவுலியா நகரில் 250க்கும் மேற்பட்ட  மக்கள் மீனவர்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் சாக்கடைகள், சகதிகள் தேங்கி இந்த பகுதியில் வசிப்பவர்களுக்கு பல நோய்கள் உரு-வாககூடிய வகையில் அவலமான நிலையை இருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிள் தமிழ்நாடு மாநிலக் குழு உறுப்பினர். ஐ வி. நாகராஜன் அப்பகுதி மக்களுடன் பார்வையிட்டார்.
அவர் கூறும்போது அப்பகுதி மக்களின் கோரிக்கைகளை கேட்டு தமிழ்நாடு அரசின் சம்பந்தப்பட்ட அதி- காரிகளுக்கும் மாவட்ட நிரவாகத்திற்கும் குடியிருப்பு பகுதிக்குள் சாக்கடை சூழ்ந்துள்ளது அகற்ற வேண்டும் என முறையிட்டனர். குழந்தைகளை, பெரியவர்களை பாதிக்ககூடிய இந்த பகுதியில் தேங்கி இருக்கும் சாக்கடை, சகதி மற்றும் குப்பைகளை உள்ளாட்சி நிர்வாகம் தமிழ்நாடு அரசு மற்றும் மாவட்ட நிர்வாகமும் அகற்றி இங்கு வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்கிற வேண்டுகோளை முன் வைத்தார்.






அப்படி சுத்தம் செய்யாத நிலையில் இங்கு வாழும் மக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியும் மிக பெரிய மறியல் போராட்டம் நடத்த வேண்டியிருக்கும் என்று கூறினார். அவருடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ். சங்கர், ஒன்றிய செயலாளர் நெருப்பு முருகேசன், ஒன்றிய குழு உறுப்பினர்கள், எம்.எஸ்.கலந்தர்,ஏ.அமீர் ஆகியோர் உடன் இருந்தனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments