அறந்தாங்கி அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற முதியவர் காரைக்குடியில் இருந்து திருவாரூர் நோக்கி சென்ற ரெயில் மோதி பலி
 
  
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மேனக்காட்டை சேர்ந்தவர் சிதம்பரம் (வயது 78). ஓய்வு பெற்ற கிராம உதவியாளர். 

இவர் நேற்று எட்டியதளியில் இருந்து நாட்டுமங்களத்துக்கு செல்லும் வழியில் சைக்கிளை தூக்கிக்கொண்டு தண்டவாள பாதையை கடக்க முயன்றார். 

அப்போது காரைக்குடியில் இருந்து திருவாரூருக்கு சென்ற ரெயில் அவர் மீது மோதியது. 

இதில் சம்பவ இடத்திலேயே சிதம்பரம் பரிதாபமாக இறந்தார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments