கரூர் மாவட்டம் மாயனூர் அருகே டாட்டா ஏஸ் லோடு வாகனம் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதி கொண்டதில் சம்பவ இடத்திலேயே இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர் .
புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் பகுதியைச் சேர்ந்தவர்கள் சரவணன் மற்றும் மாரியப்பன்.
இவர்கள் இருவரும் மாடு வாங்குவதற்காக டாட்டா ஏஸ் லோடு வாகனத்தில் காங்கேயம் நோக்கி திருச்சி- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது கேரளாவில் இருந்து அரியலூர் பகுதிக்கு சாக்கு பை ஏற்றி லாரி ஒன்று மாயனூர் அருகே வாய்க்கால் பாலம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது, டாட்டா ஏஸ் லோடு வாகனமும், லாரியும் நேருக்கு நேராக மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் சரவணன் மற்றும் மாரியப்பன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு மாயனூர் போலீசார் விரைந்தனர். உயிரிழந்த இருவரின் உடலையும் ஒருமணி நேரம் போராடி போலீசார் மீட்டனர். பின்னர், உடலை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
கரூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நடந்த விபத்தினால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்திற்கு காரணமாக இருந்த லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.