கட்டுமாவடி அருகே பைபர் படகு தலைக்குப்புற கவிழ்ந்தது: கடலில் தத்தளித்த 2 மீனவர்கள் மீட்பு




கட்டுமாவடி அருகே செம்பியன் மகாதேவி பட்டினம் கிராமத்தை சேர்ந்த நீலமேகம் (வயது 31), கண்ணதாசன் (30) ஆகியோர் பைபர் படகில் கட்டுமாவடி கடற்கரையிலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவில், மூன்று பாகம் ஆழத்தில் நள்ளிரவில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக பைபர் படகு நடுக்கடலில் தலைக்குப்புற கவிழ்ந்தது. இதனால் அவர்கள் 2 பேரும் பைபர் படகை பிடித்துக் கொண்டு தத்தளித்து, கூச்சலிட்டு கொண்டிருந்தனர்.

2 மீனவர்கள் மீட்பு

அப்போது தூரத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த அதே ஊரைச்சேர்ந்த திருமுருகன், ரமேஷ் ஆகியோர் மீனவர்கள் 2 பேரையும் காப்பாற்றி கரைக்கு அழைத்து வந்தனர். பிறகு 10-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இணைந்து 2 படகுகளில் சென்று கவிழ்ந்த பைபர் படகை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

பைபர் படகில் இருந்த மீன்பிடி உபகரணங்கள் அனைத்தும் கடலில் மூழ்கியது. மேலும், படகு என்ஜினும் சேதம் அடைந்தது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments