புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் அரசின் திட்டங்கள் ஏழை, எளிய மக்களுக்கு சென்றடைய வேண்டும்-திருச்சி எம்.பி. திருநாவுக்கரசர் வலியுறுத்தல்




புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டம், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுத் தலைவர் மற்றும் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட கலெக்டர் கவிதா ராமு முன்னிலையில் நடைபெற்றது. திருநாவுக்கரசர் தெரிவித்ததாவது, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பொது மக்களின் முன்னே ற்றத்திற்காக ஒன்றிய மற்றும் மாநில அரசின் சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதில் ஒன்றிய அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் 45 திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சியரகத்தில் அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதி மக்களும் பயன்பெறும் வகையில் பரவலாக மேற்கொள்ளவும், அரசின் திட்டங்கள் ஏழை, எளிய பொதுமக்களை சென்றடையும் வகையில் முன்னுரிமை அளித்து செயல்படுத்துவதுடன், அரசின் திட்டங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் திட்டங்கள் குறித்து விளக்கமாக எடுத்துரைக்க வேண்டும் என்றார்.

இந்நிகழ்வில் எம்.எல்.ஏ.க்கள் முத்துராஜா, ராமச்சந்திரன், வருவாய் அலுவலர் செல்வி, தனி மாவட்ட வருவாய் அலுவலர் (காவேரி-வைகை-குண்டாறு) ரம்யாதேவி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதப்பிரியா, மாவட்ட இயக்க மேலாண்மை அலகு திட்ட இயக்குநர் ரேவதி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஜெய லட்சுமிதமிழ்செல்வன், நகர்மன்ற தலைவர் திலகவதி செந்தில், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

முன்னதாக கவேரி - வைகை - குண்டாறு இணைப்பு திட்டத்திற்காக, நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக குழு உறுப்பினர்களிடையே மாவட்ட அளவிலான மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு குழுக் கூட்டம், திருநாவுக்கரசர் தலைமையில் நடைபெற்றது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments