கம்ப்யூட்டரை இயக்க மவுஸ் வேண்டாம்..! கண் போதும்... பட்டுக்கோட்டை மாணவர்களின் அசத்தல் கண்டுப்பிடிப்பு..!




தஞ்சாவூர் மாவட்டம் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலைப் பல்கலைகக்கழகம் மற்றும் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியும் இணைந்து நம்பர் 8, 9 மற்றும் 10 ஆகிய மூன்று தினங்கள் அறிவியல் கண்காட்சி பல்கலைக்கழகத்தின் உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. இதன் நிறைவு விழா 10.11.2022 அன்று 12 மணியளவில் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் செ.வேலுசாமி தலைமையில் பதிவாளர் பேராசிரியர் பி.கே.ஸ்ரீவித்யா முன்னிலையில் நடைபெற்றது.

இந்த அறிவியல் கண்காட்சியில் பல்வேறு மாணவர்களின் படைப்பாற்றலை மேம்படுத்தும் நோக்கில் சுமார் 7,500 க்கு மேற்பட்ட மாணவர்கள், பல்வேறு மாவட்டங்களிலிருந்து 50 கல்வி நிறுவனங்களின் மூலம் பங்கு கொண்டு சிறப்பித்தனர். மேலும் தங்களுடைய 235 குறுந்திட்ட ஆய்வுகள், 1,065 போஸ்டர்கள், திட்ட ஆய்வுகளை கண்காட்சியில் இடம் பெற்றன. இக்கண்காட்சியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை பாரட்டி துணைவேந்தர் பாராட்டினார்.

அப்போது பேசிய அவர், ‘மாணவர்கள் தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும். நவநாகரிக உலகத்தில் இன்று நாம் வாழ்கிறோம். தொழில் புரட்சியில் அறிவியல் முன்னேற்றம் வேண்டும். அறிவியலையும், மனித நேயத்தையும் வளர்க்க வேண்டும். அப்துல் கலாம் சொல்வதைபோல் கனவை நனவாக்க வேண்டும். பெரியாரின் வாழ்வியலை பின்பற்ற வேண்டும் என்று குறிப்பிட்டார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments