சேதுபாவாசத்திரம் அருகே, வலையில் சிக்கிய கடல் பசு விடுவிப்பு: மீனவர்களுக்கு பாராட்டு




சேதுபாவாசத்திரம் அருகே, வலையில் சிக்கிய கடற்பசுவை, பத்திரமாக கடலில் விட்ட மீனவர்களை, வனத்துறையினர் பாராட்டினர்.

தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் அருகே மந்திரப்பட்டினத்தைச் சேர்ந்த 11 மீனவர்கள், கடந்த 3ம் தேதி, கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
விரித்த வலையை இழுத்த போது, வலையில், கடற்பசு சிக்கி உயிருக்கு போராடியது. உடனே, மீனவர்கள் ஒன்று சேர்ந்து, வலையை அறுத்து, கடற்பசுவை பத்திரமாக மீண்டும் கடலில் விட்டனர்.

இதை, அவர்கள் 'வீடியோ' பதிவு செய்து தமிழக வனத்துறை மற்றும் 'வைல்ட் லைப் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா என்ற அமைப்புக்கும் அனுப்பினர்.

இதையடுத்து, அந்த மீனவர்களை பாராட்டும் விதமாக, சேதுபாவாசத்திரம் அருகே, மீனவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.

இதில், தமிழ்நாடு வனத்துறை சார்பில், 11 மீனவர்களுக்கும், தலா 5,000 ரூபாய்க்கான காசோலை, பாராட்டு சான்றிதழ், பதக்கம், சேதமடைந்த மீன் வலைக்கு, 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.

பரிசு தொகையை, தஞ்சாவூர் மாவட்ட வன அலுவலர் அகில் தம்பி வழங்கினர்.

'அபூர்வ வகை உயிரினங்களான கடற்பசுவை மீனவர்கள் பாதுகாக்க வேண்டும்.

'கடற் பசு, மீனவர்கள் வலையில் தவறுதலாக சிக்கினால், அதை கடலுக்குள் மீண்டும் விட வேண்டும்' என, மீனவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.







எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments