ஆவுடையார்கோவில் போதைப்பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்
ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில், போதைப்பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை மாவட்ட கல்வி அலுவலர் ராஜராமன் தொடங்கி வைத்தார். மாணவர்கள் போதைப்பொருள் தடுப்பு சார்ந்த வாசகங்கள் எழுதிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பி கொண்டு கடைவீதியில் ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில், பள்ளி தலைமையாசிரியர் தாமரைச்செல்வன், உதவி தலைமையாசிரியர் ஸ்டாலின், நாட்டுநலப்பணி திட்டத்தின் திட்ட அலுவலர் குமார் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments