100 நாள் வேலை திட்டம் தொடர்பான புகார்களை அதிகாரியின் செல்போன் எண்ணில் தெரிவிக்கலாம்




மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் 27-வது பிரிவின் கீழ் குறைகளை நிவர்த்தி செய்வதற்கும், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்ட சட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான புகார்களை தீர்ப்பதற்கும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு குறைதீர்ப்பாளர் உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் குறைகளை தீர்ப்பதற்காக ரகோத்தமன் என்பவர் புதுக்கோட்டை மாவட்டத்திற்கான குறைதீர்ப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருடைய செல்போன் எண் 8925811320 மற்றும் மின்னஞ்சல் முகவரி ombudspkt@gmail.com ஆகும். பொதுமக்கள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிபுரிபவர்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் தொடர்பான குறைகள் மற்றும் புகார்கள் ஏதும் இருப்பின் மேற்கண்ட குறைதீர்ப்பாளரின் தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் முகவரி மூலம் புகார் அளிக்கலாம் என மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments