மணமேல்குடி ஒன்றியத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட விழிப்புணர்வு பேரணி , கோலப் போட்டி மற்றும் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் சமத்துவக் பொங்கல் போன்ற முப்பெரும் விழா
மணமேல்குடி ஒன்றியத்தில் புதிய பாரத எழுத்தறிவு  திட்ட விழிப்புணர்வு பேரணி ,  கோலப் போட்டி   மற்றும் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் சமத்துவக் பொங்கல் போன்ற முப்பெரும் விழா நடைபெற்றது.

மணமேல்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட புதுக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மில்  இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களின் சமத்துவ பொங்கல்  புதிய பாரத எழுத்தறிவு திட்டத்திற்கான விழிப்புணர்வு பேரணி மற்றும் கோலப் போட்டிகள் நடைபெற்றது.

 இந்நிகழ்வினை மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர் மதிப்புக்குரிய  திரு செழியன் அவர்களின் தலைமையில் தொடங்கியது. மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர் மதிப்பிற்குரிய திருமதி இந்திராணி மற்றும் மணமேல்குடி வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு திருமதி சிவயோகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்வில் புதிய பாரத எழுத்தறி திட்டத்திற்கான விழிப்புணர்வு பேரணி மாணவர்கள் மூலம் நடத்தப்பட்டது. கல்வியின் அவசியம் கையெழுத்து போடுவதன் அவசியம் மற்றும் எழுத படிக்க தெரிந்து கொள்வது பற்றிய அவசியத்தை எடுத்துக் கூறப்பட்டது.  மேலும் புதிய பாரத திட்டத்தில் கற்போர் கோலப்போட்டியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.  மேலும் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் சமத்துவ பொங்கல்  வைத்து சிறப்பித்தனர்.

 கோலப் போட்டியில் வெற்றி பெற்ற கற்போருக்கு பரிசுகளும் பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டது போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி அந்தோணியம்மாள் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து இருந்தார்.

 இந்நிகழ்வில் ஆசிரியர் பயிற்றுநர்கள் முத்துராமன் வேல்சாமி அங்கையர் கன்னி மற்றும் இப்பள்ளியின் ஆசிரியர்கள் ஜான் பீட்டர் செபஸ்தியான், சித்ரா, பேபி  சாந்தி மற்றும் மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments