ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் பரிசாக நம்ம ஸ்கூல் திட்டத்தின் கீழ் அச்சு பகர்ப்பு நகல் இயந்திரம் வழங்கப்பட்டது
ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் பரிசாக அச்சு பகர்ப்பு நகல் இயந்திரம் (Xerox machine)  வழங்கிய நிகழ்வு
ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவரும் தொழிலதிபருமான தென்றல் நீலகண்டன் அவர்கள் நம்ம ஸ்கூல் திட்டத்தின் கீழ் ₹30000 மதிப்புள்ள அச்சு பகர்ப்பு நகல் இயந்திரத்தை (Xerox machine) வழங்கி தந்தார்கள்.இதனை பள்ளி தலைமையாசிரியர் தாமரைச்செல்வன், உதவி தலைமை ஆசிரியர் ஸ்டாலின்,கணினி ஆசிரியர் சுரேஷ் ஆகியோர் பள்ளியின் சார்பாக பெற்றுக்கொண்டனர்.இந்நிகழ்வில் முன்னாள் மாணவர் முருகேசன்,தென்றல் சக்தி , அனைத்து ஆசிரியர் பெருமக்கள் மற்றும் அனைத்து மாணவ மாணவிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments